சரிந்து விழுந்த சித்ரா... கழுத்து, வயிறு என ஆத்திரம் தீர குத்திக் கிழித்த கள்ளக்காதலன்!

 
சித்ரா

கழுத்து, வயிறு, மார்பு, வாய் என ஆத்திரம் தீர சராமாரியாக கள்ளக்காதலியைக் குத்தி கிழித்து கொலைச் செய்து விட்டு தப்பியோடிய கள்ளக்காதலன், பின் போலீசாருக்கு பயந்து, நீதிமன்றத்தில், தான் கொலைச் செய்ததாக கூறி சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனியைச் சேர்ந்த சித்ரா (35), கோவை சின்ன தடாகம் மாரியம்மன் கோயில் வீதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் சித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவரும் திருமணம் செய்யாமல் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு சித்ராவுக்கு திண்டுக்கல் மாவட்டம் சிலுக்குவார்பட்டியைச் சேர்ந்த மதுரைவீரன் (37) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் நெருக்கமானது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். இது தொடர்கதையாகி உள்ளது.

சித்ரா

வழக்கம்போல் கடந்த 29ம் தேதி சின்னதடாகத்தில் உள்ள வீட்டில் சித்ராவும், மதுரை வீரனும் தனிமையில் உல்லாசமாக இருந்தனர். அப்போது, சித்ரா ஏற்கெனவே இன்னொரு இளைஞருடன் கள்ளக்காதலில் இருப்பது குறித்து மதுரைவீரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரம் அடைந்த மதுரை வீரன் வீட்டில் இருந்த கத்திரிக்கோலால் சித்ராவின் கழுத்து, வாய், வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சித்ரா அங்கேயே உயிரிழந்தார். பின்னர் மதுரை வீரன் வீட்டை பூட்டி கொண்டு அங்கிருந்து தனது சொந்த ஊரான திண்டுக்கல்லுக்குச் சென்று விட்டார். 

சித்ரா

எப்படியும் சிக்கி விடுவோம் என அஞ்சிய மதுரை வீரன், நிலக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதன் பிறகே சித்ரா கொலைச் செய்யப்பட்டது தெரிய வந்தது. பின்னர் அங்கு சென்ற கோவை தடாகம் போலீசார் உடலை மீட்டனர். மேலும் மதுரை வீரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web