நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மனைவிக்கு 6 மாத சிறைதண்டனை... நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

 
ஜே கே ரித்தீஷ்

பிரபல நடிகர் ஜே.கே. ரித்தீஷ் மனைவிக்கு செக் மோசடி வழக்கில்ரூ.60 லட்சம் அபராதத்துடன் 6 மாத சிறை தண்டனையும் வழங்கி காரைக்குடி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

2007ல் ‘கானல் நீர்’ படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜே.கே.ரித்தீஷ் அதன் பின்னர் நாயகன், பெண் சிங்கம், எல்.கே.ஜி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தனது விளம்பர யுக்தியால் குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து படங்களிலும், அரசியலிலும் கவனம் செலுத்திய ஜே.கே.ரித்தீஷ், 2009ம் ஆண்டில் திமுக சார்பில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தனது தொகுதியில் மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, உடனுக்குடன் அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து வந்ததால், அப்பகுதி மக்களின் மனம் கவர்ந்த அரசியல்வாதியாகவும் வலம் வந்தார் ரித்தீஷ்.

Ritheesh

மு.க.அழகிரியின் ஆதரவாளராக வலம் வந்த ஜே.கே.ரித்தீஷ், திமுகவில் இருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டதும், திமுகவில் இருந்து விலகி  அதிமுகவில் இணைந்தார். பின்னர், 2019 தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரம் சென்றிருந்த நிலையில், வீட்டில் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 

இந்நிலையில், நடிகர் ரித்தீஷின் மனைவி ஜோதீஸ்வரி (41) காரைக்குடியில் நகைப் பட்டறை உரிமையாளரான திருச்செல்வம் என்பவரிடம் கடந்த 2019ம் ஆண்டு 60 லட்சம் ரூபாய்க்கு  தங்க நகைகள், வைரம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் வாங்கி விட்டு, மூன்று காசோலைகளைக் கொடுத்துள்ளார். 

Ritheesh

வங்கியில் பணம் இல்லாததால், மூன்று காசோலைகளும் திரும்பி வந்த நிலையில், அதற்குப் பதிலாக பணம் தருவதாக ஜோதீஸ்வரி கூறி விட்டு, பணம் தராமல் இழுத்தடித்திருக்கிறார். நீண்ட நாட்களாக பணம் தராததால், காரைக்குடி விரைவு நீதிமன்றத்தில் இது குறித்து ஜோதீஸ்வரி மீது திருச்செல்வம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி ஜெயப்பிரதா, ஜோதீஸ்வரிக்கு 60 லட்சம் அபராதம் மற்றும் 6 மாத சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web