பிரபல நடிகர் மாரடைப்பால் மரணம்... அமிதாப் பச்சனை பிரதியெடுத்து ரசிகர்களிடையே பிரபலமானவர்!
இந்தி திரையுலகில் ‘பிக் பி’ என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டு, இந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் அமிதாப் பச்சனைப் போலவே உருவ ஒற்றுமை கொண்டவர் நடிகர் ஃபிரோஸ் கான். ஆரம்ப காலங்களில் தன் உருவ ஒற்றுமையை ரசிகர்களிடையே பிரபலமடைய இவர் அமிதாப்பை போல மிமிக்ரி செய்து ரசிகர்களின் மனங்களைக் கொள்ளைக் கொண்டார். அதன் பின்னர் பல சீரியல்களிலும், மேடை நாடகங்களிலும் நடித்து வந்தவர் தொடர்ந்து பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், திடீர் மாரடைப்பு காரணமாக நேற்று நடிகர் ஃபிரோஸ் கான் மரணமடைந்துள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘பாபி ஜி கர் பர் ஹை’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்துள்ளார் ஃபிரோஸ் கான். இந்தி திரையுலகில் இவரை செல்லமாக ஜூனியர் அமிதாப் பச்சன் என்று அழைத்து வந்தனர். இந்நிலையில், நேற்று உத்தரபிரதேசத்தில் இவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், இன்று உத்திரபிரதேச மாநிலம், படவுனில் அவரது இறுதிசடங்குகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
