மகாபாரத கர்ணனாக மாஸ் காட்ட தயாராகும் பிரபல நடிகர்!!

 
சூர்யா

மகாபாரதத்தை அடிப்படையாக கொண்டு உருவாக இருக்கும் கதையில் நடிகர் சூர்யா கர்ணனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில்  இந்த   திரைப்படம் உருவாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, நடிகர் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், இதுகுறித்த  பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது நடிகர் சூர்யா கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து, சுதா கொங்கராவின் படத்திலும், வெற்றிமாறனுடன் வாடிவாசல் திரைப்படத்திலும் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சூர்யா

1997-ல் வசந்த் இயக்கத்தில் வெளியான ‘நேருக்கு நேர்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சூர்யா. அதனைத் தொடர்ந்து, பூவெல்லாம் கேட்டுபார், ப்ரண்ட்ஸ், நந்தா, காக்க காக்க, பிதாமகன், வேல், சிங்கம், சூரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.கடைசியாக இவர் நடிப்பில் கடந்தாண்டு ‘எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து கமல் நடித்த விக்ரம் படத்தில் ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இதேபோல் மாதவன் இயக்கி நடித்த ராக்கெட்ரி படத்திலும் சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்திருந்தார்.

இதுல அரசியல் செய்யாதீங்க…! அன்புமணிக்கு சூர்யா செம பதில்!!

தற்போது நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ’கங்குவா’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்தவுடன் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார் என்றும் அதன் பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் ’வாடிவாசல்’ திரைப்படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி சூர்யா பிரபல பாலிவுட் இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் மவுரியா என்பவரின் இயக்கத்தில் உருவாக இருக்கும் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படம் மகாபாரதத்தில் உள்ள கர்ணன் கேரக்டரை மையமாக வைத்து படமாக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே ராம் கோபால் வர்மா இயக்கத்தில் உருவான ’ரத்த சரித்திரா’ என்ற இந்தி படத்தில் சூர்யா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web