படப்பிடிப்பில் பிரபல நடிகர் காயம்... மருத்துவமனையில் அனுமதி! ரசிகர்கள் அதிர்ச்சி!

 
விஷ்ணு மஞ்சு

பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு, படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது, கட்டுப்பாட்டை இழந்த ட்ரோனினால் விபத்து ஏற்பட்டு, படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தெலுங்கில், ‘ஜின்னா’, ‘டைனமைட்’ போன்ற படங்களில் நடித்து, ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் விஷ்ணு மஞ்சு. படங்களில் நடித்து வருவதுடன் தெலுங்கு படங்களைத் தயாரித்தும் வருகிறார் விஷ்ணு மஞ்சு. தற்போது ‘கண்ணப்பா’ என்கிற பெயரில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார் விஷ்ணு மஞ்சு. இந்த படத்தின் படப்பிடிப்பு நியூஸிலாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று படத்தின் முக்கியமானதொரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட போது, சண்டைக்காட்சியை பிரம்மாண்டமாகக் காட்டுவதற்காக ட்ரோன் மூலம் படமாக்கியுள்ளனர்.

கட்டுப்பாட்டை இழந்த டிரோன்

இந்நிலையில், ட்ரோன் திடீரென சிக்னல் பிரச்சனையால், ஆபரேட்டரின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், கீழே விழுந்துள்ளது. அப்போது ட்ரோன் நடிகர் விஷ்ணு  மஞ்சுவின் மேலே தாழ்வாகப் பறந்தப்படி படம்பிடித்துக் கொண்டிருந்ததால், விஷ்ணு மஞ்சு மீது விழுந்து, அவரது கையில் உராய்ந்து ஆழமாக கிழித்து காயம் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஷ்ணு மஞ்சுவின் கையில் ஆழமாக காயமேற்பட்டு, ரத்தம் கொட்டியதால், உடனடியாக ‘கண்ணப்பா’ படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

பிரபாஸூடன் விஷ்ணு மஞ்சு

விஷ்ணு மஞ்சுவின் கைகளில் அதிர சிராய்ப்பு, ஆழமான காயமும் ஏற்பட்டதால், உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மருத்துவமனையில் இருந்து விஷ்ணு மஞ்சு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும் சிறிது காலம் அவர் முழுமையான ஓய்வில் இருந்த பின்பே படப்பிடிப்புக்குத் திரும்புவார் எனவும் தெரிகிறது. இந்த படத்தில் விஷ்ணு மஞ்சுவுடன் நடிகர் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web