கார் விபத்தில் பிரபல நடிகர் பங்கஜ் திரிபாதி மைத்துனர் உயிரிழப்பு... தீவிர சிகிச்சையில் சகோதரி!

 
பங்கஜ் திரிபாதி
 

 பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதி. நடிகர் பங்கஜ் திரிபாதி பாலிவுட்டில் 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்.  2 தேசிய விருது வாங்கிய படங்களிலும் நடித்து பெருமை பெற்றவர்.  இவரது உறவினர்  ராகேஷ் திவாரி மற்றும் பங்கஜின் சகோதரி சபீதா திவாரி  இருவரும் காரில் டெல்லியில் இருந்து கொல்கத்தா செல்லும் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.  


 


அந்த கார் பீகாரின் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து மேற்கு வங்காளத்திற்கு சென்றதாகத் தெரிகிறது.  இந்நிலையில், அந்த கார் நிர்சா பஜாரில் சென்றபோது, நேற்று மாலை 4.30 மணிக்கு கார் அதன் கட்டுப்பாட்டை இழந்தது.  சாலையின் நடுவில் இருந்த  தடுப்பானில் திடீரென மோதி எதிர்பாராத விபத்து ஏற்பட்டது.  இந்த திடீர் விபத்தில்  காரில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் விரைந்துவந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு   தன்பாத்தில் உள்ள ஷாகித் நிர்மல் மகதோ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பங்கஜ் திரிபாதி

மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே  ராகேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.  மேலும் திரிபாதியின் சகோதரிக்கு காலில் படுகாயம் ஏற்பட்டது.  அவருக்கு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து  போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்! 

From around the web