அதிர்ச்சி... பிரபல நடிகர் சுட்டு கொலை... திரையுலகில் பரபரப்பு!

 
ஜானி வேக்டர்
 பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி வேக்டர், கடந்த சனிக்கிழமை திருட்டு சம்பவம் ஒன்றில் ஈடுபட்ட கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது திரையுலகில் பெரும் பதற்றத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. ’ஜெனரல் ஹாஸ்பிட்டல்’, ‘ஹாலிவுட் கேர்ள்’, ‘அனிமல் கிங்டம்’ உள்ளிட்டப் பல படங்களில் நடித்ததன் மூலமாக ஹாலிவுட் ரசிகர்களிடையே புகழ் பெற்றவர் நடிகர் ஜானி வேக்டர் (37). 

ஜானி வேக்டர்
இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அதிகாலை 3 மணியளவில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடிகர் ஜானி வேக்டர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதாக அவரது தயார் தெரிவித்துள்ளார். நடிகர் ஜானி வேக்டரின் காரில் இருந்த கேட்டலிட்டிக் கன்வெர்டரைத் திருடர்கள் திருட முயற்சி செய்துள்ளனர். இதைக் கண்ட நடிகர் ஜானி சத்தம் போட்டுள்ளார்.

அமெரிக்கா போலீஸ்

உடனடியாக திருடர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றதாகவும், அருகில் இருந்தவர்கள் நடிகர் ஜானியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையில் ஜானியின் குடும்பத்தினர் புகார் கொடுத்த நிலையில் அமெரிக்க போலீசார், இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!