பிரபல நடிகர் சீனிவாச கோட்டாராவ் காலமானார்....ரசிகர்கள் அதிர்ச்சி!

 
சீனிவாச கோட்டாராவ்

 பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.  இவரது மறைவு திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகரான கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கில் பல படங்களில் குணசித்திர வேடத்திலும் வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர்.  

சீனிவாச கோட்டாராவ்

2003ல் தமிழில்  ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் 'சாமி'. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் 'பெருமாள் பிச்சை' என்ற வில்லன் கதாபாத்திரத்தில் தனது தனித்துவ நடிப்பால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர்  நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.

அவருக்கு தமிழில் இதுதான் முதல் படம். தொடர்ந்து அவர் தமிழில், 'குத்து', 'ஜோர்', 'ஏய்', 'திருப்பாச்சி', 'பரமசிவன்', 'சத்யம்', 'கோ', 'சாமி 2', 'காத்தாடி' என பல படங்களில் நடித்துள்ளார். கோட்டா சீனிவாச ராவ். நடிகர், பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்டவர். இதுவரை இவர் , மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடைசியாக 2023ல்  'சுவர்ண சுந்தரி' என்ற படம் வெளியானது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?