பிரபல நடிகரின் மகள் திருமணம்... திரையுலகமே திரண்டு வாழ்த்து!
நடிகர் ஜெயராம் மகள் திருமணத்தை அத்தனை சிம்பிளாக நடத்தி முடித்தாலும், திரையுலகினர் வாழ்த்த தவறவில்லை. மலையாள திரையுலகினர் மட்டுமல்லாமல் தமிழ் திரையுலகினரும் புதுமண தம்பதியருக்கு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் ஜெயராம் - பார்வதி தம்பதியருக்கு காளிதாஸ் என்கிற மகனும், மாளவிகா என்கிற மகளும் உள்ளனர். மகன் காளிதாஸ் தமிழில் சில படங்களில் நடித்துள்ள நிலையில், ரசிகர்களுக்கு ஏற்கெனவே பரிட்சயமானவர். இவர் தாரணி என்கிற பெண்ணை காதலித்து வந்த நிலையில், சமீபத்தில் மகள் நல்ல வரவேற்பை பெற்றார். காளிதாஸ் ஜெயராமுக்கு தனது காதலி தாரணி காலிங்கராயருடன் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.
மகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்த அதே வேகத்தில், தனது மகளின் திருமண நிச்சயதார்தத்தையும் முடித்தார் ஜெயராம். மாடலிங் துறையில் தடம் பதித்து வரும் ஜெயராம் மகள் மாளவிகாவின் கணவர் நவ்நீத் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இவர்களது திருமணம் இன்று மே 3ம் தேதி, கேரளத்தில் குருவாயூர் கோயிலில் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.
திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்ள கேரள முறைப்படி திருமணம் நடந்துள்ளது. விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியை திட்டமிட்டு வருகிறார் ஜெயராம்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
