தேர்தல் பிரச்சாரத்தில் குதித்த பிரபல நடிகர்கள்.. குவிந்த ரசிகர் பட்டாளம்.. வீடியோ வைரல்!

 
அல்லு அர்ஜுன், ராம் சரண்

ஆந்திராவில் மொத்தம் உள்ள 25 லோக்சபா தொகுதிகள் மற்றும் 175 சட்டசபை தொகுதிகளுக்கு மே 13ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பாஜக-ஜனசேனா- தெலுங்கு தேசம் கூட்டணி, காங்கிரஸ் கட்சிகள் அங்கு மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆந்திராவில் அதிக ரசிகர்களை கொண்ட சினிமா நட்சத்திரங்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.


நந்தியால் தொகுதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் ஷில்பா ரவிச்சந்திரன் கிஷோர் ரெட்டி வீட்டுக்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனது மனைவியுடன் சென்று கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார். அவரை காண அவரது ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இந்த சந்திப்புக்குப் பிறகு பேசிய அவர், ஷில்பா ரவி எனக்கு மிகவும் நல்ல நண்பர். அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பு எங்களுக்குள் உள்ளது. எனக்கு அவரை பல வருடங்களாக தெரியும்.

அவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு நாங்கள் பத்து நாட்களுக்கு ஒருமுறை சந்திப்போம். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக ஆறு மாதத்திற்கு ஒருமுறைதான் சந்திப்போம். அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். அவர் முதலில் போட்டியிட்டபோது அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்தேன். ஆனால் இப்போது ட்வீட் செய்வது போதாது அதனால் வீட்டுக்கு வந்து அவருக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால்தான் இங்கு வந்தேன்” என்றார்.


மறுபுறம், நடிகர் ராம் சரண் பவன் கல்யாணை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அல்லு அர்ஜுன் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, அல்லு அர்ஜுன் அங்கு சென்றது அவரது விருப்பம் என்று கூறியுள்ளார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web