பிரபல நடிகை மருத்துவமனையில் திடீர் அனுமதி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
நவ்யா நாயர் நவ்யா நாயர்

2001ல் இஷ்டம் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நவ்யா நாயர். இவர்மலையாளம் மற்றும் தமிழ் பட உலகில் பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார்.  பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து, விரைவில்  முன்னுக்கு வந்தவர். இவருடைய கதாபாத்திரங்களில் இவருடைய அசாத்தியமான நடிப்பு திறமை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று தந்தது. 2004ல் பிரசன்னாவுடன் இணைந்து, 'அழகிய தீயே' படம் மூலம் தமிழில் அறிமுகமானார்.

நவ்யா நாயர்

இதனையடுத்து  சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், சில நேரங்களில், ராமன் தேடிய சீதை என வரிசையாக அடுத்தடுத்து படங்கள். குறிப்பாக கலைஞரின் கைவண்ணத்தில் உருவான 'பாசக்கிளிகள்' படத்தில் இவரது நடிப்பு அபாரமாக பேசப்பட்டது.  இதன் பிறகு சந்தோஷ் மேனனுடன்  திருமணம் நடந்த பிறகு சில காலம் திரையுலகில் இருந்து விலகியிருந்தார்.  இவருக்கு ஒரு  மகன் .  தற்போது மீண்டும் மலையாள திரை உலகில் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகி வருகிறார். இதற்காகவே, 'ஜானகி ஜானே' என்ற படத்திலும் நடித்து முடித்த நிலையில் ரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. 13 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் நவ்யா நாயரை வரவேற்க ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இந்நிலையில் திடீரென நவ்யாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நவ்யா நாயர்

"ஜானகி ஜானே" படத்தின் புரோமோஷன் வேலைக்காக அடுத்தடுத்து அலைச்சல்கள் இதனால்  உணவு ஒவ்வாமை பிரச்சனையால் அவர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.  இதன் காரணமாக அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. உடனடியாக கோழிக்கோட்டில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் நவ்யா நாயர் படுத்திருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது. இதைப்பார்த்து ரசிகர்களும், நண்பர்களும் மனம்கலங்கியுள்ளனர்.  நவ்யா நாயர் விரைவில் நலம் பெற வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். இதனிடையே, நவ்யா நாயருக்கு உடல்நிலை குணமடைந்தவுடன், ஓரிரு நாட்களில் ரத்து செய்யப்பட்ட அந்த நிகழ்ச்சி மறுபடியும் நடத்தப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்