'யெஸ்... இனி நான் சிங்கிள் மதர்’ விவாகரத்தை கெத்தாக அறிவித்த பிரபல நடிகை!

 
பாமா

 யெஸ்.. இனி நான் சிங்கிள் மதர் தான் என்று தன்னுடைய கணவரைப் பிரிந்து தனியே வசித்து வருவதை கெத்தாக அறிவித்துள்ளார் பிரபல மலையாள நடிகை பாமா.

மலையாள ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை பாமா, லோஹிததாஸின் 'நிவேத்யம்' படத்தின் மூலம் அறிமுகமானவர். மலையாளம் மட்டுமல்லாமல் பிற மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை பாமா விவாகரத்து செய்துள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து செய்திகள் பரவி வந்த நிலையில், ​​தனது கணவரை பிரிந்து தனியே வந்து விட்டதை உறுதி செய்து அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் பாமா.

பாமா
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நான் இப்போது சிங்கிள் மதர்’ என்றும், 'சிங்கிள் மதராக மாறும் வரை நான் எவ்வளவு வலிமையானவன் என்று எனக்குத் தெரியாது, வலிமையாக இருப்பதுதான் எனக்கு ஒரே தேர்வாக இருந்தது. நானும் என் பெண்ணும்' என்று நடிகை பாமா பதிவிட்டுள்ளார்.
எனினும், நடிகை பாமா தனது விவாகரத்து தொடர்பான வதந்திகளுக்கு பதிலளிப்பது இது முதல் முறை அல்ல. அவர் இதற்கு முன்பு இளவரசி டயானாவின் புகைப்படத்தை வெளியிட்டு, 'ஒரு உண்மையான மனிதனுக்கு ஒரு பெண் இருந்தால் போதும்' என்ற தலைப்புடன் பதிவிட்டிருந்தார். பாமாவுக்கும், தொழிலதிபர் அருண் ஜெகதீஷுக்கும் கடந்த ஜனவரி 30, 2020 அன்று திருமணம் நடந்தது. இந்த தம்பதியருக்கு கௌரி என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கணவரை விட்டுப் பிரிந்து தனது மகள் கெளரியுடன் பாமா, தனியே வசித்து வருகிறார்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web