பிரபல நடிகை கைது... படிக்கட்டில் பயணம்... மாணவர்களை அடித்து துவைத்த இயக்குநர் பாலாவின் அண்ணன் மகள்!

 
ரஞ்சனா நாச்சியார்

சென்னை குன்றத்தூரில் அரசுப் பேருந்து ஒன்றில் படிக்கட்டில் தொங்கியபடியும், பேருந்தின் மேற்கூரையில் ஏறியபடியும்  ஆபத்தான முறையில் பயணம் செய்துக் கொண்டிருந்த  பள்ளி , கல்லூரி மாணவர்களை, பேருந்தை நிறுத்தி தாக்கிய விவகாரம் தொடர்பாக நடிகை ரஞ்சனா நாச்சியார் கைது செய்யப்பட்டுள்ளது சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போரூரிலிருந்து குன்றத்தூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, கெருகம்பாக்கம் பகுதி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, அந்த பேருந்தில் பயணம் செய்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டில் தொங்கிய படியும், பேருந்தின் கூரை மீது ஏறி நின்றபடியும் பயணம் செய்தனர்.

இதனை தனது செல்போனில் வீடியோ எடுத்த பெண் ஒருவர், நிறுத்தத்தில் பேருந்து நின்றவுடன், ஓட்டுநரிடம் சென்று இப்படியா பேருந்து ஓட்டுவீர்கள், மாணவர்களை கண்டிக்க வேண்டாமா என்று திட்டி விட்டு, படிக்கட்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்டார்.

தன்னை போலீஸ் என்று கூறிய அந்த பெண் மாணவர்களை அடித்து கீழே இறக்கி விட்ட பிறகு, நடத்துநர் மற்றும் ஓட்டுநரை அவதூறாக பேசினார். அப்போது பேருந்தினுள் இருந்த பயணிகள் அனைவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இந்நிலையில் பேருந்து ஓட்டுநர் சரவணன் மாங்காடு காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். அந்த பெண் தன்னை போலீஸ் என்று கூறியதை அடுத்து அவர் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

நடிகை ரஞ்சனா நாச்சியார்

விசாரணையில் அவர் போலீஸ் கிடையாது என்றும், நடிகை ரஞ்சனா நாச்சியார் என்பதும் தெரியவந்தது. விஷால் நடித்த 'துப்பறிவாளன்', 'இரும்புத்திரை', மற்றும் ரஜினி நடித்த 'அண்ணாத்த', 'டைரி', 'நட்பே துணை' உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார்.

ராமநாதபுரம் சமஸ்தானம் ராஜா பாஸ்கர சேதுபதியின் பேத்தியான இவர் இயக்குனநர் பாலாவின் உடன்பிறந்த அண்ணன் மகள் ஆவார். இதையடுத்து ஓட்டுநரின் புகாரின் அடிப்படையில் நடிகை ரஞ்சனா நாச்சியார் உள்ளிட்ட இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு பேருந்தை தடுத்து நிறுத்தியது, மாணவர்களைத் தாக்கியது, ஆபாசமாக பேசியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, சிறுவர்களைத் தாக்குவது என 5 பிரிவின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு  செய்துள்ளனர். இதையடுத்து நடிகை ரஞ்சனா நாச்சியாரை போலீஸார் கைது செய்தனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web