பிரபல நடிகைக்கு மார்பக புற்றுநோய்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
ஹீனா கான்


 
திரைத்துறையில் நடிகைகள்  புற்றுநோயால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள், பவதாரணி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல் நடிகை மனிஷா கொய்ராலா, சோனாலி பிந்த்தேல, லிஸா ரே உட்பட   பல நடிகைகள் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி தற்போது சிகிச்சை பெற்று நோயுடன் போராடி வருகின்றனர். அதே போல்  சமீபத்தில் பூனம் பாண்டே  கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  இறந்துவிட்டதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஆனால்  அடுத்த நாளே இது பொய்யான தகவல் என்று பூனம் பாண்டே விளக்கம் அளித்திருந்தார். அந்த வகையில் தற்போது நடிகை ஹினா கான், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து நடிகை ஹினா கான்  விளக்கம் அளித்துள்ளார். ஹினா கான், நாகினி சீரியலில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்.   பிக்பாஸ் நிகழச்சியில் பங்கேற்ற இவர், தற்போது மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அவர் உயிருக்கே ஆபத்து என கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன.  

ஹீனாகான்

இது குறித்து அவர் ” நான் மார்கப புற்றுநோயால் பாதிக்கப்பட்டு ஸ்டேஜ் 3-ல் இருக்கிறேன்.  என் உடலில் எந்த பாதிப்பும் இல்லை நான் நலமாகவே இருக்கிறேன். கேன்சரை எதிர்த்து போராடி வருகிறேன். ரசிகர்களுக்காக தொடர்ந்து நடித்துக்கொண்டே இருப்பேன்”. 
என் சிகிச்சைகள் முடித்து முழுமையாக குணமடைய வேண்டும் என்று  ரசிகர்கள் எனக்காக  பிரார்த்தனை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். எனக்கு ஏற்பட்ட மார்கப புற்றுநோயால் தான் துவண்டு போகவில்லை. உடல் ஆரோக்கியமாகவே இருக்கிறேன் என  நடிகை ஹினா கான் தெரிவித்துள்ளார்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web