31 வயசு தான்... பிரபல நடிகை புற்றுநோயால் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி!

 
காங் சியோ ஹா
 


தென் கொரியாவின் பிரபலத் திரைப்பட டெலிவிஷன் நடிகை   காங் சியோ ஹா . 31 வயதான இவர்  வயிற்றுப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் அவரது உடல்நிலை மோசமாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரது இறுதிச் சடங்கு ஜூலை 16ம் தேதி காலை சியோலில் நடைபெற இருப்பதாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.  மரண செய்தி உறுதியான பிறகு அவரது குடும்ப உறுப்பினர் இன்ஸ்டாகிராமில் அவருக்கான அஞ்சலியை பகிர்ந்துள்ளனர்.

South Korean actress, Kang Seo Ha, 31 ...
அந்த பதிவில்  “உனக்கு இந்த அளவுக்கு வலி இருந்தாலும், எங்களை பற்றி நீயே கவலைப்பட்டாய்… உணவுக்கூட சாப்பிட முடியாத நிலையில் இருந்த நீ, என் உணவுக்குச் செலவு செய்யப் பிடித்தம் பிடித்தாய்” என அவரது தங்கை பதிவிட்டுள்ளார்.
‘ஸ்கூல்கேர்ள் டிடெக்டிவ்ஸ்’, ‘ஃபர்ஸ்ட் லவ் அகெய்ன்’, ‘நோபடி நோஸ்’ போன்ற வெற்றிப் படங்களில் நடித்திருந்த காங், கடைசி வரை தன்னலமின்றி வாழ்ந்தவர் என அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?