பிரபல நடிகை வீட்டில் திருட்டு... வீட்டு பணிப்பெண் கைது!
தமிழ் திரையுலகில் நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை அதுல்யா ரவி. இவர் கோவை வடவள்ளி மருதம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன் இவருடைய வீட்டில் பாஸ்போர்ட் மற்றும் ரூ2000 ரொக்கப்பணம் திருடுபோய் உள்ளது . இது குறித்து நடிகை அதுல்யாவின் தாய் வடவள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இவர்களது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வருபவர் தொண்டாமுத்தூர் அடுத்த குளத்துபாளையத்தில் வசித்து வரும் செல்வி. இவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது தோழி சுபாஷினி உடன் சேர்ந்து பணம் மற்றும் பாஸ்போர்ட்டை திருடியதை செல்வி ஒப்புக்கொண்டுள்ளார். இந்த வாக்குமூலத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
