பிரபல நடிகை நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு... பரபரக்கும் திரையுலகம்!!

 
ஜெயப்பிரதா

பிரபல நடிகையும்,  முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதாவுக்கு 6 மாத சிறைத்தண்டணை விதிக்கப்பட்டிருந்தது. கோர்ட் ஆணையின் படி ஜெயப்பிரதா  15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.20 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும்  எனத் தெரிவித்துள்ளது.   ஜெயப்பிரதா,  ராம் குமார், ராஜ்பாபு மூவரும் சென்னை அண்ணா சாலையில் தியேட்டர் நடத்தி வந்தனர்.

அந்த தியேட்டரில்  பணிபுரிந்த தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இ.எஸ்.ஐ. தொகையை தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை. இது குறித்து  தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்குகளை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், ஜெயப்பிரதா உட்பட  மூவருக்கும் தலா 6 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ5,000  அபராதம் விதித்து  ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஜெயப்பிரதா தரப்பில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.  


இதை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன்,   நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய முடியாது என மனுவை தள்ளுபடி செய்தார்.  அதே நேரத்தில்  6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்ட நடிகையும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயப்பிரதா, 15 நாட்களில் நீதிமன்றத்தில் சரணடைந்து ரூ.20 லட்சத்தை  டெபாசிட் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.   ரூ.20 லட்சத்தை செலுத்தினால் மட்டுமே தண்டனையை நிறுத்திவைத்து ஜாமீன் வழங்க வேண்டும் என சம்மந்தப்பட்ட நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web