பிரபல ஹாலிவுட் நடிகை சாலி கிர்க்லேண்ட் காலமானார்!

 
ஹாலிவுட்
 

 

ஹாலிவுட் நடிகையும் “ப்ரூஸ் அல்மைட்டி” திரைப்படத்தின் நட்சத்திரமுமான சாலி கிர்க்லேண்ட் காலமானார். கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அவர் மரணமடைந்ததாக மருத்துவமனை தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மரணத்திற்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், சமீபத்தில் அவர் நான்கு எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டு, குணமடையும் போது கடுமையான தொற்று மற்றும் நீண்டகால சிகிச்சையால் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மக்களிடத்தில் ஆழ்ந்த பாசம் கொண்ட ஒரு உண்மையான கலைஞர் சாலி,” என அவரது பிரதிநிதிகள் கூறியுள்ளனர். நாடக அரங்கில் தனது கலைவாழ்க்கையை தொடங்கிய சாலி கிர்க்லேண்ட் பின்னர் திரைப்படத்துறையில் முழுமையாக ஈடுபட்டார்.

அவர் நடித்த முக்கியமான படங்களில் The Sting, A Star is Born, மற்றும் Bruce Almighty ஆகியவை அடங்கும். “அன்னா” படத்தில் செக்கோஸ்லோவாக்கிய நடிகையாக நடித்ததற்காக அவர் ஆஸ்கார் பரிந்துரை பெற்றதுடன், கோல்டன் குளோப் விருதையும் வென்றார். அவரது கடைசி படைப்பு இந்த ஆண்டு வெளிவந்த Kali என்ற குறும்படமாகும்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!