பிரபல நடிகை பாலியல் பலாத்காரம்... இயக்குநர் உமர் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்!

 
இயக்குநர் உமர்

படத்தில் நடிக்க வாய்ப்புத் தருவதாக கூறி  பிரபல மலையாள இயக்குநர் உமர் லுலு பாலியல் பலாத்காரம் செய்தார் என்று இளம்நடிகை ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் இயக்குநர் ஒமர் லுலு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

 

இயக்குநர் உமர்


மலையாளத்தில் ‘ஹேப்பி வெட்டிங்’, ‘ஒரு அடார் லவ்’, ‘பேட் பாய்ஸ்’ உள்ளிட்டப் பல படங்களை இயக்கியவர் ஒமர் லுலு. இவர் இயக்கிய படம் ஒன்றில் நடித்த நடிகை ஒருவர் உமர் லுலு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தருவதாக சொல்லி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்து பரபரப்பை கிளப்பியிருக்கிறார். 

இந்த வருடம் தொடக்கத்தில் இருந்து அதாவது ஜனவரி முதல் கடந்த ஏப்ரல் மாதம் வரை அந்த நடிகையை பல இடங்களுக்கு அழைத்து சென்று பழகி இருக்கிறார். பட வாய்ப்புகள் தருவதாக சொல்லி அவரை பாலியல் பலாத்காரம் செய்தவர், திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதி அளித்து ஏமாற்றியதாக கொச்சி போலீஸ் கமிஷனரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார் அந்த நடிகை. 

 

இயக்குநர் உமர்

 

இது குறித்து காவல்துறை தரப்பில், “நடிகையின் புகார் அடிப்படையில் நாங்கள் இயக்குநர் உமர் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்திருக்கிறோம். பாதிக்கப்பட்ட அந்த நடிகையிடம் நாங்கள் வாக்குமூலம் வாங்கிவிட்டோம். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு வருமாறு உமர் லுலுவுக்கு சம்மன் அனுப்புவோம்” என்று தெரிவித்தனர். 

ஆனால், இந்தப் புகார் பொய்யானது என உமர் மறுத்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், “என் கடைசிப் படத்தில் கூட அந்த நடிகை நடித்திருப்பார். அடுத்தப் படத்திற்கான வாய்ப்பு வரவில்லை என்பதால் அவர் புகார் கொடுத்திருக்கிறார். நான் அவருடன் நட்பாக பழகி வந்தேனே தவிர வேறு எதுவும் இல்லை. காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பேன்” என்றார்.

 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!