பிரபல நடிகை வித்யா சுத்தியலால் அடித்து கொடூரக்கொலை... கணவர் கைது!

 
வித்யா

 மே 20ம் தேதி பிரபல திரைப்பட நடிகை வித்யா அவருடைய கணவர் நந்தீஷால் படுகொலை செய்ததாக தகவல்கள் வெளியாகின.  கர்நாடக மாநிலம் மைசூர் அருகே நேற்று முன்தினம்  பிரபல திரைப்பட நடிகை வித்யாவை அவருடைய கணவர் நந்தீஷால்  சுத்தியலால் தலையில் தாக்கியதில் வித்யா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  2018 ல் வித்யாவுக்கும் நந்திஷாலுக்கும் திருமணம் நடைபெற்றது. அதில் இருந்தே இருவருக்குள்ளும்  கருத்து வேறுபாடு இருந்து வந்தது.

வித்யா
இது குறித்த வாக்குவாதங்கள், தகராறுகள் தொடர்ந்து இருந்தபோதிலும் சமீபகாலமாக அதிகரித்தது. இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில்  அவருடைய கணவர் வித்யாவின் வீட்டிற்கே சென்று அவரை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளார். நடிகை வித்யா பஜ்ரங்கி, அஜித், வேதா, ஜெய் மாருதி 800 உள்ளிட்ட பல படங்களில்  நடித்துள்ளார். அத்துடன் நடிகை வித்யா  காங்கிரஸ் கட்சியின் முக்கிய பொறுப்பிலும் இருந்து வந்துள்ளார்.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!