அதிர்ச்சி!! பிரபல பாலிவுட் நடிகர் காலமானார்!! சோகத்தில் திரையுலகம்!!

 
மங்கள் தில்லான்

பிரபல பாலிவுட் நடிகர் மங்கள் தில்லான். இவர் உடல் நலக் குறைவு  காரணமாக காலமானார். இவருக்கு வயது48. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து வீட்டில் இருந்தபடியே சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று  காலை உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சில மணி நேரங்களிலேயே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 

மங்கள் தில்லான்

இவரது மறைவு திரையுலகில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. மங்கள் தில்லான் பாலிவுட் திரைப்படங்கள் மற்றும் ஹிந்தி டிவி தொடர்கள் மூலம் பிரபலமானவர். இவர் 1986ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'புனியாட்' தொடர் மூலம் அறிமுகமானவர்.நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பன்முகத்திறன் கொண்டவர் மங்கள் தில்லான். 

இதனையடுத்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'கூன் பாரி மாங்' தொடரின் மூலம்  பிரபலமடைந்தார். அதன் பிறகு   1993ல் ஒளிபரப்பான 'ஜுனூன்' தொடரில் இவரது நடிப்பு பலராலும் பேசப்பட்டது.  'பியார் கா தேவ்தா', 'ரன்பூமி', 'ஸ்வர்க் யஹான் நர்க் யஹான்', 'விஷ்வாத்மா', 'தில் தேரா ஆஷிக்', 'ட்ரெய்ன் டு பாகிஸ்தான்' உட்பட   பல்வேறு படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் மங்கள் தில்லான் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்வு தில்லான் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.   மிக இளம் வயதிலேயே தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக பிரபலமானவர் மங்கள் தில்லான். பஞ்சாப் லூதியானா பகுதியைச் சேர்ந்த இவர், தனியார் சேனல்களில் பல வெற்றிகரமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனால், ரசிகர்களிடம் பிரபலமான மங்கள் தில்லான், திரையுலகிலும்  தடம் பதித்து பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.  

மங்கள் தில்லான்

இதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த அவர், சமீபத்தில் உடல்நலக்குறைவால் பஞ்சாபில் உள்ள லூதியானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக உடல்நிலை மிகவும்  மோசமடையவே நேற்று ஜூன் 11ல்  சிகிச்சை பலனின்றி மங்கள் தில்லான் காலமானார். இவருடைய   மறைவுக்கு திரைத்துறை நடிகர்கள்,  அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் , உறவினர்கள், நண்பர்கள்  பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web