பிரபல நகைச்சுவை நடிகர் கார் விபத்தில் பலி!! ரசிகர்கள் அதிர்ச்சி!!

 
கொல்லம் சுதி

பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கொல்லம் சுதி . இவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 39. இவர்  கேரளா மாநிலம் திருச்சூர் கய்பமங்கலத்தில் நடந்த கார் விபத்தில்  இன்று அதிகாலை 4:30 மணியளவில் கயபமங்கலம் பனம்பின் என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றது.  ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீடு திரும்பி கொண்டிருக்கும் போது  அவருடைய  கார், எதிரே வந்த பிக்கப் வேன் மீது பயங்கரமாக  மோதியது. இதில் நடிகர் சுதி, பினு அடிமாலி, உல்லாஸ் அரூர், மகேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். 

கொல்லம் சுதி
இந்த விபத்தில் நடிகர் சுதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. படுகாயமடைந்த அவரை அருகில் இருந்த பொதுமக்கள், கொடுங்கலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதி உயிழந்தார்.அக்கம் பக்கத்தில் இருவர்கள்  உடனடியாக  இவரை மீட்டு  கொடுங்கல்லூர் ஏஆர் மருத்துவமனையில் சேர்த்தனர் . ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.

கொல்லம் சுதி

2015ல் வெளியான ”கந்தாரி” படத்தின் மூலம் மலையாள சினிமாவில் நுழைந்தவர் கொல்லம் சுதி. கட்டப்பனாவில் ரித்திக் ரோஷன், குட்டநாடன் மார்பப்பா, தீட்டா ராப்பை, வாகத்திரிவ், உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர்  தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பார்வையாளர்களை அதிகம் சிரிக்க வைத்தவர் .இவரது மறைவு செய்தி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரை நட்சத்திரங்கள், பிரபலங்கள், ரசிகர்கள், நண்பர்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web