இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் காலமானார்... பிரபலங்கள் இரங்கல்!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிரபல வீரர் பிஷன்சிங் பேடி. சுழல் ஜாம்பவானான இவர் சற்று முன் காலமானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 77.
இவர் இந்திய அணிக்காக 1967 முதல் 1979ம் ஆண்டு வரை 67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியவர்.
அந்த காலக்கட்டத்தில் எரப்பள்ளி பிரசன்னா, பி.எஸ் சந்திரசேகர், எஸ் வெங்கடராகவன், பிஷன் சிங் பேடி அடங்கிய நால்வரின் சுழல் கூட்டணி உலக அளவில் பெரும் பேசுபொருளாக இருந்தது. பிஷன் சிங்
இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார். 67 டெஸ்ட் போட்டிகளில் 266 விக்கெட்களும், 370 முதல்தர போட்டிகளில் 1,560 விக்கெட்களையும் வீழ்த்தி சாதனை படைத்தவர். அவரது மறைவுக்கு முன்னாள் கிரக்கெட் வீரர்கள், தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!