பிரபல இயக்குனர் அமீர் ராசா ஹுசைன் காலமானார்!!

 
அமீர்ஹுசைன்

திரைத்துறையில் மூத்த நடிகர்கள் பலரும் உயிரிழந்து வருவது ரசிகர்கள், மூத்த கலைஞர்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகு இந்த வகையான திடீர் உயிரிழப்புக்கள், மூத்த கலைஞர்கள் மரணம்  இவைதொடர்கதையாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் பிரம்மாண்டங்கள், திரைப்படங்களில்  லேட்டஸ்ட் அப்டேட்களுடன் ரசிகர்களை கவரும் வகையில் படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. எந்த தொழில்நுட்பமும் இல்லாத காலத்திலேயே பிரம்மாண்டங்களை நாடகங்களில் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் அமீர் ராசா.


புகழ்பெற்ற நாடகர் அமீர் ராசா ஹுசைன். இவர் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 66. தற்போதுள்ள மாடர்ன் தொழில்நுட்பம் மூலம் தான்  பாகுபலி, ஆர்.ஆர்.ஆர், பொன்னியின் செல்வன் சரித்திர படங்களை பிரம்மாண்டமாக காட்சிப்படுத்த முடிகிறது. இந்த வகையான   பிரம்மாண்டங்கள் எல்லாம் வருவதற்கு முன்பே  இதனை மேடை நாடகங்களின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்  அமீர் ராசா ஹுசைன்.ராமாயணத்தை மையமாக வைத்து பிரபாஸ் நடிப்பில் ரூ.600 கோடி பட்ஜெட்டில் ஆதிபுருஷ் படத்தை எடுத்தனர். இதே போல் ஒரு  பிரம்மாண்ட காவியத்தை கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னரே மேடை நாடகத்தின் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தவர்  அமீர் ராசா ஹுசைன். 1994ல்   முதன்முதலில் லெஜண்ட் ஆஃப் ராம் பெயரில் ராமாயணத்தை நாடகமாக அரங்கேற்றம் செய்தவர் 

அமீர்ஹுசைன்

.இந்த நாடகத்தின் கடைசி நிகழ்ச்சி முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் முன்னிலையில் நடத்தப்பட்டது. சுமார் 3 ஏக்கர் நிலப்பரப்பில் 19 செட்டுகள் அமைக்கப்பட்டு, 35 கதாபாத்திரங்கள் மற்றும் 100 பேர் கொண்ட குழுவினரின் உதவியோடு இந்த பிரம்மாண்ட நாடகத்தை நடத்தி அசத்தி இருந்தார். அமீர் ராசா ஹுசைன். அதேபோல் கார்கில் போரை மையமாக வைத்து தி பிஃப்டி டே வார் என்கிற நாடகத்தை நடத்தி உள்ளார்.

rip
இவர்  சில காலம் அரசியலிலும் பணிபுரிந்தவர்.   2013 வரை டெல்லி பாஜக துணைத் தலைவராக இருந்தார். இதையடுத்து மோடியை விமர்சனம் செய்து விட்டு அவர் அக்கட்சியில் இருந்து விலகினார். கடந்த சில மாதங்களாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த அமீர் ராசா ஹுசைன்   ஜூன் 3ம் தேதி காலமானார். அவரின் மறைவு நாடகத்துறைக்கு பேரிழப்பாக பார்க்கப்படுகிறது. மறைந்த அமீர் ராசா ஹுசைனுக்கு விராத் தல்வார் என்ற மனைவியும், சுனிஸ் சுகைனா மற்றும் குலாம் அலி என இரு பிள்ளைகளும் உள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web