பிரபல Food Vlogger மர்மான முறையில் உயிரிழப்பு.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

 
Food Vlogger

கேராளவை சேர்ந்த பிரபல Food Vlogger வீட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் புகழ்பெற்ற இன்ஸ்டகிராம் பக்கமான 'ஈட் கொச்சி ஈட்' வீடியோக்கள் மூலம் உணவுப் பிரியர்களுக்கு  ராகுல் என் குட்டி  பரிச்சயமான நபராக இருந்து வந்தார். உணவு பிரியர்களையும், சமூகங்களையும் ஒன்றிணைக்கும் ஒரு முயற்சியான சமையல் கலாச்சாரத்தின் உறுப்பினராகவும் ராகுல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இறுதியாக கடந்த புதன் கிழமை அன்று உணவு வ்லாக் பற்றிய அவரது கடைசி வீடியோ வெளியிடப்பட்டது. ஈட் கொச்சி ஈட்-டின் 'ஓ கொச்சி' வீடியோக்களிலும் அவர் அடிக்கடி தோன்றுவார், இது கொச்சியில் உள்ள புதிய விஷயங்களை பற்றி அறிய உதவும் ரீல்களைப் பகிரும் ஒரு பக்கமாகும். 

இந்நிலையில் மாதவனத்தில் உள்ள அவரது வீட்டில், நேற்று வெள்ளிக்கிழமை இரவு சடலமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுக்குறித்து Eat Kochi Eat சமூக ஊடக தளத்தில் அவருடைய இறப்பு செய்தி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது. அந்த பக்கத்தில் வெளியான பதிவில் "தயவுசெய்து அவரை உங்கள் பிரார்த்தனையில் வைத்திருங்கள், இந்த அழகான ஆன்மாவின் இழப்பைத் தாங்கும் வலிமையை நாங்களும் அவரது குடும்பத்தினரும் பெற விரும்புகிறோம்," என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Eat Kochi Eat member Rahul N Kutty passes away at 33

பல ஃபுட் விலாகர்களும் தங்கள் இரங்கலை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளனர். மறைந்த ராகுல், கொச்சியில் தனது மனைவி மற்றும் இரண்டு வயது மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார். 

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!

From around the web