பிரபல கால்பந்து வீரர் மைதானத்திலேயே சரிந்து விழுந்து பலி... ரசிகர்கள் அதிர்ச்சி.. !!

 
ரபேல்

சர்வதேச கால்பந்து வீரர் ரபேல் டுவாமேனா . இவருக்கு வயது 28. இவர் கானா நாட்டை சேர்ந்தவர். இவர்  அல்பேனியாவின் டாப் பிரிவில் உள்ள இரண்டு அணிகளான KF எக்னாட்டியா மற்றும் பார்டிஜானி   அணிகளுக்கு இடையேயான  போட்டியில் ரபேல் டுவாமேனா மைதானத்திலேயே திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  

ரபேல்

ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ரபேல் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரின் திடீர் உயிரிழப்பு ரசிகர்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

ரபேல்


இச்சம்பவம் குறித்து   கானா கால்பந்து சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்  "இந்த கடினமான தருணத்தில் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் " எனத் தெரிவித்துள்ளது.
 முன்னதாக   2017ம் ஆண்டு ரபேல் டுவாமேனாவுக்கு இதய நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு  அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 2021ல்  ஆஸ்திரியாவில் நடந்த ஒரு ஆட்டத்தின் போது அவர் மைதானத்தில் இதேபோல் சரிந்து விழுந்து பின்னர் மருத்துவமனை சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.      

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web