பிரபல ரவுடி கொலை விவகாரம்.. மேலும் 4 பேர் கைது.. போலீசார் அதிரடி!

 
தீபக்ராஜா

நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே வாகைகுளம் பகுதியை சேர்ந்தவர் சிவகுருமுத்துசுவாமி மகன் தீபக்ராஜா (வயது 30). இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. மேலும் அவரை ரவுடி பட்டியலில் சேர்த்து போலீசார் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 20ம் தேதி நெல்லை - திருச்செந்தார் சாலையில் உள்ள ஒரு உணவகத்திற்கு வருங்கால மனைவி மற்றும் அவரது நண்பர்களுடன் சாப்பிட வந்தார். அப்போது அங்கு பதுங்கியிருந்த கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் தீபக்ராஜாவை வெட்டிக் கொன்றது.

இதையடுத்து, பாளையங்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதையடுத்து, இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் கொலை வழக்குடன் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி 4 பேரையும் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் இன்று மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த 4 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்ய முயன்றபோது, நவீன், முருகன் ஆகிய இருவர் தப்பி ஓட முயன்றனர். அப்போது இருவரின் கை, கால்களில் அடிபட்டது. இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மீதமுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 4 பேர் சிறையில் உள்ளனர். மீதமுள்ள 4 பேரில் 2 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீஸார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!