பிரபல கன்னட நடிகர் தர்ஷன் கொலை வழக்கில் கைது!

 
தர்ஷன்
 பிரபல கன்னட திரைப்பட நடிகர் தர்ஷனை கொலை வழக்கில் இன்று பெங்களூரு போலீசார் கைது செய்துள்ளனர். ‘அனதாரு’, ‘கிராந்திவீர சங்கொல்லி ராயண்ணா’ உள்ளிட்ட கன்னடப் படங்களில் நடித்துப் பிரபலமானவர் நடிகர் தர்ஷன். இவர் தூகுதீபா புரொடக்ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் துவங்கி பிரபல நடிகர், தயாரிப்பாளர், விநியோகிஸ்தர் என்று கன்னட திரையுலகில் பரபரப்பாக இயங்கி வந்தார். 

மாடல் பவித்ரா கெளடாவுடன் திருமணத்தை மீறிய உறவு வைத்திருந்ததற்காக கன்னட திரையுலகில் விமர்சிக்கப்பட்டு வந்தார். இவரது மனைவி விஜயல‌ஷ்மி, மாடல் பவித்ரா கெளடாவை மிரட்டியதாகவும் செய்தி வெளியாகி அப்போது பரபரப்பானது. இந்நிலையில், பவித்ரா கவுடாவை ஆன்லைனில் துன்புறுத்தியதாக கூறப்பட்ட  ரேணுகா சுவாமி என்பவர் கடந்த ஜூன் 8ம் தேதி கொலை செய்யப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.

தர்ஷன்
இந்நிலையில், போலீசாரின் தகவலின் படி, சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகா சுவாமி, தர்ஷனுக்குச் சொந்தமான மைசூர் பண்ணை வீட்டிற்கு வரவழைக்கப்பட்டு, சித்திரவதை செய்து கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் ஜூன் 9 அன்று காமக்ஷிபாளையாவுக்கு அருகில் உள்ள வாய்க்காலில் கண்டெடுக்கப்பட்டது.
போலீசாரின் விசாரணையின் போது, ​​பணப் பிரச்னை காரணமாக ரேணுகா சுவாமியைக் கொன்றதாகக் கூறி 3 பேர் சரணடைந்தனர்.  இருப்பினும் போலீசாரின் மேலதிக விசாரணையில் தர்ஷனுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதை பெங்களூரு காவல்துறையினர் கண்டறிந்தனர். 
இந்நிலையில், மைசூருவில் உள்ள பண்ணை வீட்டில் நடிகர் தர்ஷன் இருந்த போது இன்று போலீசார் தர்ஷனைக் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தர்ஷன் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web