பிரபல பாடகரும், இசையமைப்பாளருமான கே.ஜி.ஜெயன் காலமானார் ... பிரபலங்கள் நேரில் அஞ்சலி!

கடந்த 69 வருடங்களாக இசை உலகில் தொடர்ந்து பணியாற்றி வந்த ஜெயனின் 90வது பிறந்தநாள் விழா கடந்த ஆண்டு நடைபெற்றது. இசையையே தனது வாழ்க்கையாகக் கொண்ட ஜெயன், கர்நாடக இசை உலகில் மட்டுமின்றி, திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள் என அனைத்திலும் தனக்கே உரித்தான பாணியில் ரசிகர்களை வசீகரித்திருந்தார்.
சுவாதி திருநாள் சங்கீத அகாடமியில் இருந்து ஞானபூஷணம் தேர்ச்சி பெற்றார். செம்பை வைத்தியநாத பாகவதர் போன்ற கர்நாடக ஜாம்பவான்களிடம் 18 வருடங்களும், டாக்டர் பாலமுரளிகிருஷ்ணாவிடம் ஆறு வருடங்களும் பயிற்சி பெற்றார். 1988ல் தனது இரட்டை சகோதரர் கே.ஜி.விஜயனின் அகால மரணம் ஜெயனை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது, ஆனால் ஐயப்பப் பாடல்கள் மூலம் தனது சோகத்தில் இருந்து மீண்டார். ஜெயனுக்கு பத்மஸ்ரீ விருதும், திருவிதாங்கூர் தேவசம் போர்டு அவரது ஐயப்ப பாடல்களுக்காக ஹரிவராசனம் விருதும் வழங்கி கவுரவித்தது. சங்கீத நாடக அகாடமி விருதையும் பெற்றுள்ளார்.

ஆயிரக்கணக்கான இசை கச்சேரிகள் நிகழ்த்தியுள்ளார். யேசுதாஸ், எஸ்.பி.பாலசுப்ரமணியம், சீர்காழி கோவிந்தராஜன், டி.எம்.சௌந்தரராஜன், எஸ்.ஜானகி, பி.சுசீலா, வாணி ஜெயராம் போன்ற புகழ்பெற்றவர்கள் இவரது இசையில் பாடியிருக்கின்றனர். மலையாளத்தில் 19 படங்களுக்கும், தமிழில் நான்கு படங்களுக்கும் இசையமைத்துள்ளார். முதல் படம் 'பூமியிலே மலகா'. நட்சத்திர தீபங்கள் திலங்கி, ஹிருதயம் தேவாலயம் போன்றவை இன்றும் இசை வல்லுனர்களின் விருப்பமான பாடல்களாக உள்ளன.எஸ் ரமேசன் நாயர் எழுதி ஜெயன் இசையமைத்த 'ராதாதன் பிரேமதோதானோ' பாடல் இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
