பிரபல இசையமைப்பாளர் ICU-வில் அனுமதி....ரசிகர்கள் அதிர்ச்சி!
பிரபல திரைப்பட இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் இவர் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 1970கள் மற்றும் 80களில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வந்தவர் சங்கர் கணேஷ்.

இவர், தனது திறமையான இசையால் பல திரைப்படங்களுக்கு உயிர் கொடுத்திருந்தார். இவர் இசையமைத்த பாடல்கள் இன்றும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. சென்னையில் வசித்து வரும் இவர், இன்று திடீரென மிகக் கடுமையான மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டார்.

இதையடுத்து, வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்த கூடுதல் தகவல்கள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை. இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
