பிரபல பாப் இசை பாடகி டினா டர்னர் காலமானார்...அதிபர் இரங்கல்!

 
டினா டர்னர்

 

அமெரிக்காவில் பிரபல பாடகி டினா டர்னர். இவர் வயது மூப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவருக்கு வயது 83. இவர் 1939ல் பிறந்து 1957ல் பாடகியாக அறிமுகமானவர் இசை ராணியாக அறியப்படும் இவர் ஆறு கிராமிய விருதுகளை வென்றவர் . டர்னர் ஒரு ஏழை விவசாயக் குடும்பத்திலிருந்து வந்ததால் முன்னேற  பல்வேறு தடைகளை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது.


பாடுவதைத் தவிர, நடிகராகவும் நடனக் கலைஞராகவும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் விரும்பப்பட்டவர்.ராக் அண்ட் ரோல் இசையில் ராணியாக கொண்டாடப்படும் டர்னர்  பாடும்போது வித்தியாசமான உடையணிந்தும், வித்தியாசமான முடி அலங்காரத்தோடும் பாடல் உலகில் புரட்சியை ஏற்படுத்தியவர். அவருக்கு பின் பலரும் அவரின் பாணியில் உடையணிந்து இசை நிகழ்ச்சிகள்  செய்யும் அளவிற்கு இசை துறையில் ஆதிக்கம் செலுத்தினார்.

rip
1990களில் பாப் பாடகியாக கலக்க தொடங்கிய இவர் சுவிட்சர்லாந்தில் குஷ்னாத் என்ற இடத்தில் வசித்து வந்தார். இவர் சுவிட்சர்லாந்தில் சூரிச் நகரில் உள்ள அவரது வீட்டில் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டிருந்தார். இவரது மரணத்திற்கு  இசைக்கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.  டர்னர் மறைவு குறித்து  அமெரிக்க முன்னால் அதிபரான பாரக் ஒபாமா, தனது ட்விட்டர் பக்கத்தில், தனது இரங்கலை பதிவிட்டுள்ளார். அத்துடன் திரைப்பிரபலங்கள், இசை ரசிகர்கள் பலரும் தங்களுடைய இரங்கலை பதிவிட்டு வருகின்றனர். "டினா டர்னரின் திறமைக்கு எல்லையில்லை. அவரது மன உறுதி் மிகுந்த  பாராட்டுக்குரியது. இளம் வயதில் நிறைய சிக்கல்களைக் கடந்துவந்து தனக்கென பெயரை உருவாக்கிக் கொண்டவர். இசையுலகில் தடம் பதித்தவர்," என அமெரிக்க அதிபர் ஜோ பைடன்  தெரிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web