அட... பிரபல பாப் பாடகரின் காலணி கோடி ரூபாய்க்கு ஏலம்!

 
எல்விஸ் பிரெஸ்லி


அமெரிக்காவைச் சேர்ந்த மறைந்த பிரபல பாப் பாடகர்  எல்விஸ் பிரெஸ்லி. இவர் நடிகரும் கூட. இவரது  காலணி இந்திய மதிப்பில் , ரூ.1.25 கோடிக்கு அதாவது 152,000 அமெரிக்க டாலர் ஏலம் போயுள்ளது.எல்விஸ் பிரெஸ்லி அணிந்திருந்த ஒரு ஜோடி நீல நிற மெல்லிய தோல் காலணிகள் ஹென்றி ஆல்ட்ரிட்ஜ் மற்றும் சன் ஏல நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது.  

அவரின் தீவிர ரசிகர் ஒருவர் இதனை ஏலம் எடுத்துள்ளார்.  இனி பயன்பாடு இல்லாத  அந்த காலத்து காலணி சுமார் ரூ.1.25 கோடிக்கு ஏலம் போனது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.  இது ஒரு பிரபலத்தின் காலணி என்பதால், அந்த விலைக்கு அவரது ரசிகரை பெற்று கொண்டது பார்க்க வேண்டிய விஷயமாக உள்ளது.

ஷூ


1950களில் எல்விஸ் பிரெஸ்லி மேடை ஏறிப்பாடும்போது ஊதா நிறத்திலான காலணிகளை அதிக அளவில் பயன்படுத்தினார். குறிப்பாக  ஐ வாண்ட் யூ, ஐ நீட் யூ, ஐ லவ் யூ என பல நிகழ்ச்சிகளில்  பிரெஸ்லி   இந்த ஷூக்களை அணிந்திருந்தார்.  அமெரிக்க ராணுவத்தில் சேர்வதற்கு முன்பு, 1958 ல் தனது நண்பர் ஆலன் ஃபோர்டாஸுக்கு இந்த காலணிகளை வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web