கழிவு நீரில் சமைக்கும் பிரபல உணவகம்.. அலைமோதும் கூட்டம்.. சுவாரஸ்ய பின்னணி!

 
 கஸ்டாக்ஸ் உணவகம்

தொழிற்சாலை கழிவுகள் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு முக்கிய பங்களிப்பாகும். இந்த கழிவு நீரால் விவசாய நிலங்கள் மாசுபடுவதுடன் சுற்றுச்சூழல் சீர்கேடும் ஏற்படுகிறது. இந்நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் கழிவு நீரை மறுசுழற்சி செய்து குடிநீராக பயன்படுத்துகின்றனர். உலகெங்கிலும் உள்ள பல சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தண்ணீரை மறுசுழற்சி செய்வது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

உதாரணமாக, பெல்ஜியத்தில் உள்ள ஒரு உணவகம் கழிவு நீரை மறுசுழற்சி செய்கிறது. பெல்ஜியத்தில் குர்னே என்ற நகரில் கஸ்டாக்ஸ்  என்ற உணவகம் அமைந்துள்ளது. இந்த உணவகத்தில், நவீன தொழில்நுட்பத்தில், 5 நிலைகளில் கழிவு நீரை சுத்திகரிக்கப்பட்டு, குடிநீர், டீ தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

மேலும், கழிவு நீருடன் சேர்ந்து தேங்கும் மழைநீரும் பல வழிகளில் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கும் புதிய முயற்சியாக இதனை மக்கள் அதிகளவில் குடித்து வருவதாக உணவக மேலாளர் தெரிவித்தார். இந்த மறுசுழற்சி செய்யப்பட்ட தண்ணீரில் கூடுதல் பாதுகாப்பு தாதுக்கள் சேர்வதால் சாதாரண தண்ணீரை விட அதிக ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக நீரியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web