ரசிகர்கள் அதிர்ச்சி... பிரபல ராக் பாடகர் ஜான் மைக்கேல் காலமானார்!

 
ஜான் மைக்கேல்
 


 

பிரின்ஸ் ஆஃப் டார்க்னெஸ் என ரசிகர்களால்  அழைக்கப்பட்ட  ராக் பாடகர் ஜான் மைக்கேல், சமீபகாலமாக  பல்வேறு நோய்களுடன் போராடி வந்தார்.தற்போது ஜான் மைக்கேல் மரணமடைந்தது குறித்து அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்களுடைய அன்பான ஓஸி ஆஸ்போர்ன் இன்று காலை காலமானார். இது வார்த்தைகளால் தெரிவிக்க முடியாத அளவுக்கு சோகமானது.

ராக்

அவர் எங்களது குடும்பத்தினரின் அன்பால் சூழப்பட்டிருந்தார். இந்த சோகமான நேரத்தில் எங்கள் குடும்பத்தின் தனிபட்ட நிகழ்வுக்கு மரியாதை கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்" எனத் தெரிவித்துள்ளனர்.'பிரிட்டிஷ் ஹெவி மெட்டல் இசைக்குழுவான பிளாக் சப்பாத்தின்' முன்னணி பாடகர் ஓஸி ஆஸ்போர்ன், அவரது குழுவில் அவரின் குரல் மிகவும் பிரபலமானதாக மாறியது. இவரது குரலில் அயர்ன்மேன், பாரனாய்டு, வார் பிக் போன்ற டிராக்குகள் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.

20 ஆண்டுகளாக இசையுலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள ஜான் மைக்கேல், மூன்று வாரங்களுக்கு முன்னதாக அதிகாரபூர்வமாக இசைக்குழுவில் இருந்து விலகினார். மீண்டும் ஜூலை 5 ஆம் தேதி இசைக்குழுவினருடன் இணைந்தார். அவருக்கு பிளாக் சப்பாத் சார்பில் பிரியாவிடை நிகழ்ச்சி நடைபெற்றது. யுகே மியூசிக் ஹால் ஆஃப் ஃபேம் மற்றும் யுஎஸ் ராக் அண்ட் ரோல் ஹால் ஆஃப் ஃபேம் இரண்டிலும் 2 முறை கௌரவிக்கப்பட்டார் ஓஸி. அதனைத் தொடர்ந்து ஓஸியின் திறமைக்கு ஏராளமான விருதுகள் கிடைத்தன.

Ozzy Osbourne dead at 76: Rock legend’s long health battle with Parkinson’s, spinal injuries

அவற்றில் ஐவர் நோவெல்லோ விருது, 5 கிராமி விருதுகள், காட்லைக் ஜீனியஸ் விருது, கிளாசிக் ராக்கின் லிவிங் லெஜண்ட் பரிசு போன்றவைகளாகும். அதிலும், 12 முறை கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.  அவருக்கு தெல்மா ரிலே, ஷரோன் என்ற இரு மனைவிகளும், ஐமி, கெல்லி, ஜாக், ஜெசிகா மற்றும் லூயிஸ் என்ற 5 குழந்தைகளும் உள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?