வாங்க, குடிச்சி அருவியில கும்மாளம் போடுவோம்... பிரபல ரவுடி சர்ச்சை பதிவு!

 
வரிச்சியூர் செல்வம்


 
துரையின் பிரபல ரவு   வரிச்சியூர் செல்வம் . இவர் வழக்கு ஒன்றில் ஆஜராக ஆகஸ்ட் 7ம் தேதி  நெல்லை வந்தார். அவரும், அவரது கூட்டாளிகளும் நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு செல்லும் வழியில்  மேக்கரைக்குச் சென்று நண்பர்களுடன் குடித்து கும்மாளமிட்டனர். அங்கிருந்து அவர் ஒரு வீடியோவை இன்ஸ்டாவில்  பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ  தற்போது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

வரிச்சியூர் செல்வம்


சுமார் ஒரு நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோவில், வரிச்சியூர் செல்வம், செங்கோட்டை அருகே மேக்கரையில் அடர்ந்த மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் தனது நண்பர்களுடன் அமர்ந்துள்ளார். அவர்களுக்கு முன்பாக பல வகையான மது பாட்டில்கள் மற்றும் உணவு வகைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அந்த வீடியோவில்  வரிச்சியூர்செல்வம், ‘‘வாங்க.... மேக்கரைக்கு வாங்க. ரம், பீர், பிராந்தி, விஸ்கி, ஒயின், பெப்சி, தண்ணி எல்லாம் இருக்கிறது.

வரிச்சியூர் செல்வம்
குடிச்சிட்டு அருவியில் கும்மாளமிடுங்க. மாப்ள அந்த அருவியை காட்டுங்க....வாங்க.... இங்க வாங்க வறுத்த மீனு, சிக்கன், மட்டன், கோழி, குடிப்போங், கும்மாளம் அடிப்போங்க...பண்ணுங்க...சீக்கிரம் சாகப் போறோம்ங்க.. சரிங்க. கட் பண்ணுங்க என மது விருந்துக்கு வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். அந்த  வீடியோவை பதிவு செய்யும் நபர், ‘‘அண்ணன் வரிச்சியூர் செல்வம் ஜாலியா என்ஜாய் பண்ணிட்டு இருக்கிறார். எல்லாரும் வாங்க, ஜாலியா இருக்கலாம்’’ எனக் கூறி முடிக்கிறார். இந்த வீடியோ வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?