காதலருடன் நிச்சயதார்த்தம்... பிரபல சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு திருமணம்!

 
கோபிகா

 பிரபல சின்னத்திரை நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு திருமணம் நடைப்பெற உள்ள நிலையில், காதலருடன் நிச்சயதார்த்தம் முடித்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். ‘அன்பே வா’ சீரியல் நடிகை ஸ்ரீகோபிகாவுக்கு தனது காதலருடன் நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், ரசிகர்களும், சின்னத்திரை நடிகர்களும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ‘அன்பே வா’ சீரியல் மூலம் பிரபலமானவர் ஸ்ரீகோபிகா. கேரளாவைப் பூர்விகமாகக் கொண்ட ஸ்ரீகோபிகா சீரியலில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் இருந்தார். பின்பு ‘90ML' திரைப்படம் மூலம் சினிமாவிலும் அறிமுகமானார். 
இவருக்கும் நடிகர் வைசாக் ரவி என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது. கடந்த 2016-ல் நட்பாக ஆரம்பித்த இவர்களது உறவு திருமண பந்தத்தில் முடிந்திருக்கிறது. பெற்றோர், உறவினர்கள் சம்மதத்துடன் தனது காதலரைக் கைபிடிக்கிறார். 

கோபிகா


திருமணம் குறித்து சீக்கிரம் அறிவிப்போம் என்றும் நிச்சயதார்த்தம் முடிந்த நாள் தன் வாழ்வில் மறக்க முடியாதது என்றும் குறிப்பிட்டுள்ளார் ஸ்ரீகோபிகா. ரசிகர்களும் சின்னத்திரை பிரபலங்களும் இந்த ஜோடிக்கு தங்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web