சென்னையில் பிரபல பாடகர் சித் ஸ்ரீராம் இசைத்திருவிழா.. மிஸ் பண்ணவங்களுக்கு இன்னொரு வாய்ப்பு... டிக்கெட் வாங்க முந்துங்க!

 
சித் ஸ்ரீராம்

சென்னையில் இசைத் திருவிழா களைக்கட்ட துவங்கியிருக்கிறது. உடனே முந்துங்க... மிஸ் பண்ணவங்களுக்கு இன்னொரு வாய்ப்பு. பிரபல பாடகர் சித் ஸ்ரீராமின் இசை கச்சேரி வொய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று ஜூன் 22ம் தேதி நடைபெற இருந்த நிலையில், மழைக் காரணமாக ஜூலை 20ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

தன் வசீகர குரலால் ரசிகர்களை வசியம் செய்திருக்கும் சித் ஸ்ரீராம் பிறந்தது சென்னையாக இருந்தாலும் சிறு வயதிலேயே கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்து, இளம் வயது முதலே வெளிநாட்டவராகவே வளர்ந்தவர் சித் ஸ்ரீராம்.  இளம் வயதிலேயே முறையாக இசையைக் கற்று தேர்ந்த சித் ஸ்ரீராம், 2013ல் ஏ.ஆர் ரகுமான் இசையில், மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான "கடல்"  படத்தில் "அடியே" பாடல் மூலமாக தமிழ் திரையில் பாடகராக தன் திரையுலக பயணத்தைத் தொடங்கினார். 

ஒவ்வொரு பாடலிலுமே ரசிகர்களை மெய் மறக்க செய்யும் சித் ஸ்ரீராம் இசைக் கச்சேரி ரசிகர்களிடையே பெரும் ஆவலைத் தூண்டியிருக்கிறது. இந்நிலையில், "Fever Live" சித் ஸ்ரீராமின் இசை கச்சேரியை தயாரித்து வழங்க தயாராகி இருக்கிறது. சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், "நீ சிங்கம் தான்" எனும் தலைப்பில் சித் ஸ்ரீராமின்  இசை கச்சேரி ஜூலை 20ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது.

இது குறித்து Fever Live தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், சென்னையில் பிறந்து வளர்ந்த சித் ஸ்ரீராம், மீண்டும் தனது சொந்த மண்ணில் இசை கச்சேரி ஒன்றை நடத்த விருக்கிறார். அண்மையில் அவர் "Coachella Valley Music and Arts Festival 2024ல்" கலந்து கொண்டு அசத்தியதை போலவே சென்னையிலும் இசைக் கச்சேரி நடைபெற உள்ளதாக கூறியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி, மராத்தி மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளிலும் நேர்த்தியாக பாடும் திறன் கொண்ட எல்லையற்ற கலைஞரான சித் ஸ்ரீராம் இசைக் கச்சேரி திரையுலக ரசிகர்களை மட்டுமல்லாமல் இசை ரசிகர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

"நீ சிங்கம் தான்" இசைக் கச்சேரிக்கான டிக்கெட்டுகள் தற்போது விற்பனைக்கு வந்திருக்கிறது. Paytm Insider மற்றும் "Book My Show" உள்ளிட்ட இணையதளங்களுக்கு சென்று இந்த இசை கச்சேரிக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். கடைசி நேர ஏமாற்றத்தைத் தவிர்க்க இப்போதே உங்களுக்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துடுங்க.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் “சித் ஸ்ரீராம் லைவ் கான்சர்ட், சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜூலை 20ம் தேதி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக  பார்வையாளர்கள் மற்றும் கச்சேரி உள்கட்டமைப்பு,  மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்து, கச்சேரியை மீண்டும் திட்டமிடுவதற்கான கடினமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு இசைப்பிரியர்களுக்கு  அசௌகரியத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தக்கூடும் என்பதை  புரிந்துகொள்கிறோம்.  இதனால் ஏற்படக்கூடிய ஏமாற்றத்திற்கு நாங்கள் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். 
”Toyow Nee Singham Dhan”  சித் ஸ்ரீராம் லைவ்  கச்சேரிக்கான புதிய தேதி ஜூலை 20, 2024 மற்றும் புதிய இடம் ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கம், சென்னை என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான.  ஃபீவர் மற்றும் சிட்டின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம்  பக்கத்தில்  @feverfmofficial மற்றும் @sidsriram என டியூன் செய்ய மறக்காதீர்கள். ஏற்கனவே டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு  வாட்ஸ்அப்/மின்னஞ்சல் மூலம் நேரடியாக இடம் பற்றிய தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.   

உங்கள் புரிதலையும் தொடர்ந்த ஆதரவையும் நாங்கள் பாராட்டுகிறோம். தற்போதுள்ள டிக்கெட்டுகள் மறு திட்டமிடப்பட்ட தேதிக்கு செல்லுபடியாகும் என்பதை நினைவில் கொள்ளவும். சென்னையில் நடக்கும் மிகப்பெரிய சித் ஸ்ரீராம் கச்சேரிக்கு தயாராகுங்கள். அங்கே சந்திக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!