ரசிகர்கள் அதிர்ச்சி... பிரபல இயக்குநர் கரண் ஜோஹருக்கு அரிய வகை நோய் பாதிப்பு!

 
கரண் ஜோஹர்
பாலிவுட் இந்தி திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், தொகுப்பாளர் எனப் பன்முகம் கொண்டவர் கரண் ஜோஹர், ‘பாடி டிஸ்மார்பியா’ என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தான் ‘பாடி டிஸ்மார்பியா’ நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்தியை இயக்குநர் கரண் ஜோஹர் உறுதி செய்து, ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். 

கரண் ஜோஹர் தயாரிப்பில், நாகேஷ் பட் இயக்கத்தில் லக்‌ஷயா, ராகவ் ஜூயல் உள்ளிட்டப் பலர் நடிப்பில் வெளியான ‘கில்’ திரைப்படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் அரிய வகை நோய் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.

கரண் ஜோஹர்

இதுபற்றி பேசிய அவர், “எனக்கு எட்டு வயதில் இருந்தே ‘பாடி டிஸ்மார்பியா’ என்ற நோய் இருக்கிறது. அதாவது, தன் தோற்றத்தைப் பற்றி எதிர்மறை சிந்தனை இருக்கும். இதற்காக, பல மருத்துவர்களை சந்தித்து நான் சிகிச்சை எடுத்துக் கொண்டேன்.

மனரீதியான பிரச்சினைகளையும் சந்தித்தேன். என் தோற்றத்தை வெளியில் காட்டக் கூடாது என்பதற்காக தளர்வான உடைகளை எல்லாம் அணிந்து கொள்வேன். என்ன தான் நான் உடல்நீதியாக நன்றாக இருப்பதாக பலர் சொன்னாலும், மன ரீதியாக நான் போராடிக் கொண்டிருக்கிறேன்” என வருத்தத்துடன் இந்த செய்தியை தன் ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். ‘காஃபி வித் கரண் ஜோஹர்’ நிகழ்ச்சி மூலம் பல வருடங்களாக லட்சக்கணக்கான ரசிகர்களிடையே  பிரபலமாக இருந்து வரும் கரண் ஜோஹர் அரிய வகை நோயால், 10 வயதிலிருந்து பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web