ரசிகர்கள் அதிர்ச்சி... பிரபல ஹாலிவுட் நடிகர் மைக்கல் மேட்சன் காலமானார்!

 
மைக்கல் மேட்சன்


 
ஹாலிவுட் திரையுலகில்  சினிமா, தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகர் மைக்கல் மேட்சன். இவர் அகைன்ஸ்ட் ஆல் ஹோப்  படத்தின் மூலம் அறிமுகமானவர் தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார்.


குறிப்பாக   இயக்குநர் குயிண்டன் டாரண்டினோ இயக்கிய ரிசர்வையர் டாக்ஸ், கில்பில், தி ஹேட்புல் எய்ட், ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் உட்பட பல   படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து அசத்தினார்.இறுதியாக, லெஜெண்ட் ஆஃப் ஒயிட் டிராகன் படத்தில் நடித்திருந்தார். குணச்சித்திர நடிகராக, வில்லனாக கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மைக்கல் மேட்சன்
இந்நிலையில், அமெரிக்காவிலுள்ள கலிஃபூர்ணியா மாகாணத்தில் மைக்கல் மேட்மன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது.  இவரது மறைவுக்கு ஹாலிவுட் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றன.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?