அக்னி வெயிலுக்கு செம அறிவிப்பு... அரசு பேருந்துகளில் இனி ஓட்டுநர்களுக்கு மின்விசிறி!

 
மின்விசிறி

தமிழகத்தில் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகளின் நிலை அந்தோ பரிதாபம் தான். அதிலும் பேருந்து ஓட்டுனர்கள் அடுப்பில் உட்கார்ந்து ஓட்டுவதை போன்ற நிலைமை தான். பலரும்  நொந்து நூடுல்ஸாகி வரும் நிலையில் வெயில் பாதிப்பிலிருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் வகையில்  சென்னை மாநகரப் பேருந்துகளில் பேட்டரி மின்விசிறிகள் பொருத்தப்பட்டு வருகின்றன. பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கை மீது பேட்டரி மின்விசிறிகள் பொருத்தப்படுகின்றன. மகளிர் கட்டணமில்லாப் பேருந்து உட்பட சாதாரண கட்டணப் பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கையில் பேட்டரி மின்விசிறி பொருத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

பேருந்து

முதற்கட்டமாக சென்னையில் 1000  மாநகரப் பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளில் பேட்டரி மின்விசிறி பொருத்தப்பட்டு வருகிறது.  சென்னையில் தமிழகத்தின் பல்வேறு பணிமனைகளைச் சேர்ந்த 250 பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கைகளுக்கு தற்போது பேட்டரி மின்விசிறி பொருத்தும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. கத்திரி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் ஓட்டுநர் இருக்கை அருகே போதுமான காற்றோட்டம் இருக்கும்படி  பேட்டரி மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web