பிறந்தநாளில் அஜித்தை டென்ஷனாக்கிய ரசிகர்கள்.. மதுரையில் ஒட்டியுள்ள போஸ்டரால் பரபரப்பு!

 
அஜித்

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அஜித் இன்று (மே 1) தனது 52வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அஜித் பிறந்தநாளை முன்னிட்டு திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் அஜித்குமாரின் பிறந்தநாள் வாழ்த்து புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் தெறிவிடுகிறது. அந்த அளவுக்கு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் பெரியளவிலான பேனர்கள், போஸ்டர்கள் ஒட்டியும் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அஜித்

அந்த வகையில் மதுரையில் அஜித் ரசிகர்கள், அவரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த போஸ்டரில் மக்களால் நீங்கள்.. மக்களுக்காகவே நீங்கள்... உங்கள் சேவை இப்போது தமிழ்நாட்டுக்கு தேவை என தலைமைச் செயலக புகைப்படத்துடன் மதுரையில் பல்வேறு பகுதிகளில் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

அஜித்

நடிகர் விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில், அதற்கு போட்டியாக அஜித் ரசிகர்கள் நடிகர் அஜித்குமாரை அரசியலுக்கு அழைக்கும் விதமாக ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நடிகர் அஜித் ரசிகர் மன்றமே வேண்டாம் என்று கலைத்து விட்டார். ஆனால் ரசிகர்கள் அரசியலுக்கு அழைத்து போஸ்டர் ஒட்டியிருப்பது அவரை வம்புக்கு இழுப்பதுபோன்றது என திரைத்துறையினர் கூறி வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web