நீண்...ட வரிசையில் காத்திருக்கும் ரசிகர்கள்!! கடைசி லீக் போட்டி டிக்கெட் விற்பனை தொடக்கம்!!

 
சேப்பாக்கம்

ஐ.பி.எல். சீசன் 16க்கான  கிரிக்கெட் தொடர் போட்டிகள் இந்தியாவின்  முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் மே 14ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ளது.  இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பெண்கள் தனி வரிசையில் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கிச்செல்கின்றனர். ரூ.2,000, ரூ.2,500 டிக்கெட்டுகளை கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணைய தளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.  ரூ.3,000, ரூ.5,000 விலைக்குரிய டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

சிஎஸ்கே டிக்கெட்

இந்த ஐபிஎல் சீசனில் செம மாஸாக விஸ்வரூபமெடுத்து வருகிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்நிலையில், சென்னையில் நடைப்பெற உள்ள அடுத்த போட்டிக்கு இன்று  டிக்கெட் விற்பனை நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளுக்கு, சென்னை மக்கள் காண அதிகளவில் ஆர்வம் காட்டுவதால் டிக்கெட் விற்பனை நாளன்று ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் அலைமோதுகிறார்கள்.முதல் நாள் இரவே டிக்கெட் வாங்குவதற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். அதே சமயம், டிக்கெட் வாங்கி, அதிக விலைக்கு விற்பனைச் செய்து வருவதும் நடைபெறுகிறது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளை நேரில் காண ரசிகர்களிடையே அதிக போட்டி நிலவுகிறது. 

சிஎஸ்கே டிக்கெட்

ஒரு நபருக்கு 2 டிக்கெட்டுக்கு மேல் வழங்கப்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அலுவலகத்தில் காலை 10.30 முதல் 11 மணி வரை டிக்கெட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு 2 ஆயிரம் டிக்கெட்கள் தனி வரிசையிலும், மாற்று திறனாளிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கை டிக்கெட்டுகள் தனி வரிசையிலும் விற்பனை செய்யப்படும் என சென்னை அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.  நாளை காலை 9.30க்கு டிக்கெட் விற்பனை தொடங்க உள்ள நிலையில் ரசிகர்கள் இப்போதே டிக்கெட்டுகளை வாங்குவதற்கு திட்டமிடத் தொடங்கி விட்டனர். 

பெண்களுக்கு தனி வரிசை என்பதால், ரசிகர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களை அழைத்துக் கொண்டு டிக்கெட் வாங்குவதற்கு திட்டமிட்டு வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளிடமும் டிக்கெட் வாங்கித் தரும்படி இப்போதில் இருந்தே பேசி வருகின்றனர். தங்களது தோழிகளை டிக்கெட் வாங்கிக் கொடுக்கும் படி ஆண்கள் நச்சரிக்க துவங்கி உள்ளனர். சமூக வலைத்தளங்களிலும், சென்னை போட்டிக்கு டிக்கெட் பெற்று தரும் படி, தோழிகளுக்கு ரிக்வெஸ்ட் தருகின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web