விவசாயி வீடியோ வெளியிட்டு தற்கொலை.... கடனை அடைக்க முடியாததால் சோகம்!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ருக்வார்பட்டியில் பழனிச்சாமி. இவருக்கு திருமணமாகி 13 வயதில் மகள் உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர் அப்பனூத்து பகுதியில் விவசாய தோட்டத்தை பிரகாஷ் என்பவரிடமிருந்து குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார்.
தோட்டத்திற்கு அருகில் கௌதம், வஞ்சிமுத்து என்கின்ற பால் விற்பனையாளரிடம் 1 லட்சம் ருபாய் கடன் பெற்று 4 மாடுகளை வாங்கி விவசாயம் செய்து வந்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டதால் அங்கிருந்து மாடுகளை பழனிச்சாமியின் தாய், தந்தையரிடம் கொண்டு சென்று விட்டார். வாங்கிய கடனையும் திருப்பி கொடுக்க முடியவில்லை. இதனால் கௌதம் மாடுகளை திரும்ப பிடித்து சென்றதாக கூறப்படுகிறது, இதனால் மனமுடைந்த பழனிச்சாமி விவசாயி விஷம் அருந்தி விட்டார். அந்த சமயத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு எனக்கு மானம் போகிற நேரத்தில் என் உயிர் அவசியமில்லை எனக் கூறிவிட்டு விஷமருந்தி விடுகிறார்.
அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிச்சாமி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!