வீட்டை விட்டு வெளியேறிய மனைவி,.. 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி!

 
தற்கொலை

கோவில்பட்டியில் மனைவி மாயமானதால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தையும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்து 

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வானரமுட்டி ராமலிங்க புரத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி மகன் மாடசாமி (35). இவரது மனைவி இந்திராணி (30). இந்த தம்பதிக்கு பொன் தர்ஷன் (12), பொன் சரண்யா (8) என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திராணி வீட்டை விட்டு சென்று விட்டார். இதுகுறித்து மாடசாமி நாலாட்டின்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

தூத்துக்குடி

அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மனைவி மாயமானதால் மனமுடைந்த மாடசாமி தனது 2 குழந்தைகளுகக்கும் விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் குடித்துள்ளார். இதையடுத்து 3பேரும் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய  இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவ் ஆனந்த் வழ்ககுப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web