கொடூரம்... 14 வயசு மகள், 6 வயது மகன்.. இருவரையும் கொன்று தந்தை தற்கொலை!

 
யமுனா

சென்னை மேற்கு மாம்பலத்தில் தன்னுடைய 14 வயதுடைய மகளையும், 6 வயதான மகனையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் தந்தை ஒருவர். சென்னையில் இரும்பு வியாபாரம் செய்து வருபவர் 47 வயது  மோகன்ராஜ். இவருக்கு மனைவி  யமுனா மேல் கடந்த சில மாதங்களாக சந்தேகம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி இருவருக்கும் சண்டை, சச்சரவு, தகராறு தொடர்ந்தது.  நாளடைவில் சந்தேகம் பெரும்விஷமாக மாறியதில் மோகன்ராஜ் தனது 14 வயது மகளையும் ஆறு வயது மகனையும் கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆம்புலன்ஸ்

தனது தற்கொலை குறித்து  மோகன்ராஜ் எழுதிய கடிதமும் போலீசிடம் சிக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்து  போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.  யமுனா வேலைக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்த போது, வீடு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.  அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது, சாய் ஸ்வாதி கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், தேஜஸ் கழுத்து நெரிக்கப்பட்டும் சடலமாகக் கிடந்தனர். மோகனும் தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web