அத்துமீறும் மாமனார்... கண்டு கொள்ளாத கணவன்... குழந்தையுடன் இளம்பெண் போராட்டம்!

 
விக்னேஸ்வரி

கிருஷ்ணகிரி மாவட்டம் பேச்சம்பள்ளி அடுத்த ஜிங்கள்கதிரம்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் விக்னேஸ்வரி (28). இவர் தனது கணவர் திருப்பதி (32), நான்கு வயது மகளுடன் வசித்து வந்தார். திருப்பதி விவசாயம் செய்து வருகிறார். ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒன்றாக வசித்து வந்தனர்.

இந்நிலையில், தற்போது பெரும் பிரச்சினை உருவாகியுள்ளது. விக்னேஸ்வரியின் மாமனார் பெருமாள் கடந்த சில மாதங்கள் ஆகும் அவருக்கு பாலியல் ரீதியான தொல்லைகளை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விக்னேஸ்வரி தனது கணவரிடம் பலமுறை தெரிவித்துள்ளார். இதனை அவர் இதனை கண்டு கொள்ளவில்லை என்று கூறப்பபடுகிறது. 

விக்னேஸ்வரி

அதாவது, ஆறு மாதங்களாக திருப்பதியின் தந்தை பெருமாள், விக்னேஷ்வரியிடம் அடிக்கடி தகராறு செய்வதாக அந்த பெண் புகார் கூறியுள்ளார். மேலும், திருப்பதி வீட்டில் இல்லாத நேரத்தில், மாமனார் பெருமாள், விக்னேஷ்வரியிடம் தகாத முறையில் நடந்து கொள்வதாகவும் கூறி, இரு மாதங்களுக்கு முன் விக்னேஷ்வரி தாய் வீட்டிற்கு சென்றார்.

நேற்று முன்தினம் போச்சம்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் விக்னேஷ்வரி புகார் அளித்தார். போலீசார் மனுவை வாங்க மறுத்து திருப்பி அனுப்பினர். இதனையடுத்து தனக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று நேற்று முன்தினம் மாலை பூட்டிய வீட்டின் முன், தன் பெண் குழந்தையுடன் விக்னேஷ்வரி தர்ணாவில் ஈடுபட்டார். 

விக்னேஸ்வரி

மாமனார், மாமியார், கணவர் ஆக்கிய மூன்று பேரும் வீட்டைப் பூட்டிவிட்டு அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள கொட்டகையில் குடியிருந்து வருவதாகக் கூறப்படுகிறது.  தனது உரிமைக்காகப் பெண் ஒருவர் தனது 4 வயதுக் குழந்தையுடன் தனது கணவரின் வீட்டின் முன்பு போராடி வருவது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web