விபத்தில் இறந்த தந்தை.. இழப்பீட்டு பணத்தை பிரித்து தராத தாயை கொடூரமாக கொன்ற மகன் கைது!

 
சக்கரவர்த்தி

கிருஷ்ணகிரி மாவட்டம்  போச்சம்பள்ளி அருகே உள்ள மந்திப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவரது மனைவி ராமலிங்கம்மாள் (69). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். விபத்தில் பால்ராஜ் மற்றும் ஒரு மகன் உயிரிழந்த நிலையில், தனியாக வசித்து வந்த ராமலிங்கம்மாளுக்கு இரண்டு கால்களும் செயலிழந்தன. இவரது மூத்த மகன் சக்கரவர்த்தி (45) தேங்காய் உரிக்கும் தொழில் செய்து வருகிறார்.

அவருக்கு திருமணமான நிலையில், அவரது மனைவி மற்றும் மகன்கள் பிரிந்து வாழ்கின்றனர். இதனால் சக்கரவர்த்தி தனது தாய் ராமலிங்கம்மாளுடன் வசித்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் ராமலிங்கம்மாள் கத்தியால் குத்தி ரத்த வெள்ளத்தில் கதறினார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வழியிலேயே ராமலிங்கம்மாள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்தூர் போலீசார், ராமலிங்கம்மாள் மகன் சக்கரவர்த்தியை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். அதில், தாயை கொன்றதை ஒப்புக்கொண்டார்.

சக்கரவர்த்தி போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: எனது தந்தையும், தம்பியும் விபத்தில் இறந்துவிட்டனர். அதற்கான இழப்பீட்டுத் தொகை அம்மாவுக்கு வந்தது. பணத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொன்னேன். ஆனால் அவர் அதை மறுத்தார். இதனால் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று நள்ளிரவு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து பணத்தை பிரித்து தருமாறு அம்மாவிடம் தகராறு செய்தேன்.

கைது

பணம் தர முடியாது என்று கூறியதால், அருகில் கிடந்த கத்தியை எடுத்து  குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். பின்னர், போலீசார் என்னை பிடித்தனர். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, சக்கரவர்த்தியை கைது செய்த போலீஸார், போச்சம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, தர்மபுரி கிளைச் சிறையில் அடைத்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web