மது குடிக்க செல்போனை அடகு வைத்த தந்தை.. விரக்தியில் கல்லூரி மாணவர் எடுத்த விபரீத முடிவு!

 
கொலை

திருவள்ளூர் பள்ளிப்பட்டு தாலுகா ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தை அடுத்த வெள்ளத்தூர் கிராமத்தின் ஜே.ஜே.நகர் பகுதியில் வசிப்பவர் கோபி. ஆர்.கே.பேட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சொரக்காயலம்மா. இவர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். இவர்களது மகன் பாலு (வயது 19). திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்சி. இவர் கணினி அறிவியல் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கோபி குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

சாதி சண்டை

வீட்டில் உள்ள அனைத்து பொருட்களையும் அடகு வைத்து குடித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு  கோபி குடிக்க பணம் இல்லாததால் பாலுவின் செல்போனை எடுத்து ஆயிரம் ரூபாயிற்கு அடகு வைத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மகன் பாலு தந்தையை கண்டித்துள்ளார். இதில் கோபமடைந்த தந்தை கோபி வீட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

அதனால் மனம் உடைந்தது நேற்று யாரும் இல்லாத நேரத்தில் கல்லூரி மாணவர் பாலு விட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆர்.கே.பேட்டை போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு விசாரணை நடத்தி பாலுவின் உடலை மீட்டனர். அவரை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web