குழந்தைகள் படிப்பு செலவுக்காக கிட்னி விற்ற தந்தை.. மோசடி கும்பலிடம் சிக்கி ஏமாற்றம் அடைந்த சோகம்!

 
மதுபாபு கர்லாபதி

குழந்தைகளை படிக்க வைக்க பெற்றோர்கள்  கடன் வாங்கி படிக்க வைக்கிறார்கள். ஆந்திராவை சேர்ந்த தந்தை ஒருவர் தனது குழந்தைகளுக்கு கல்வி  செலவுகாக சிறுநீரகத்தை விற்க முடிவு செய்தார். இருப்பினும், சிறுநீரகத்தை வாங்கி, பணத்தை தராமல் ஏமாற்றிய கும்பல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திராவை சேர்ந்தவர் மதுபாபு கர்லாபதி. 31 வயதான இவர், அப்பகுதியில் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். வருமானம் போதாததால் குடும்ப செலவுக்கு அவ்வப்போது கடன் வாங்கி வந்தார்.

ஆன்லைன் ஆப்ஸ் மூலமாகவும் கடன் வாங்கியுள்ளார். இதனால் அவரது கடன் தொகை அதிகரித்துள்ளது. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தபோதுதான் பேஸ்புக்கில் ‘சிறுநீரகத்தை விற்றால் பணம் தருகிறோம்’ என்ற விளம்பரத்தைப் பார்த்தார். மேலும் சிறுநீரகத்திற்கு ரூ.30 லட்சம் தருவதாக கூறப்பட்டிருந்தது. இதனால், தனது சிறுநீரகத்தை விற்க முடிவு செய்த அவர், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த பாஷா என்ற முகவரை முதலில் சந்தித்தார். பணம் தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளார். இருப்பினும், அவருக்கு சந்தேகம் உள்ளது.

அப்போது விஜயவாடாவை சேர்ந்த பெண் ஒருவர் மதுபாபுவிடம் தன்னை அறிமுகம் செய்து கொண்டு, தானும் சிறுநீரகம் தானம் செய்ததாகவும், ஆபரேஷன் முடிந்து பணம் வந்ததாகவும் கூறி சமாதானப்படுத்தியுள்ளார். இதனால் அந்த கும்பலை மதுபாபு முழுமையாக நம்பினார். அதன்பிறகு சில நாட்களில் அவருக்கு உடனடியாக சிறுநீரகம் தேவை என்று கூறப்பட்டு விஜயவாடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து சிறுநீரகம் அகற்றப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு முன், சிறுநீரகம் பெற விரும்பும் குடும்பத்தினரை மதுபாபுவிடம் நேரடியாக பேச வைத்துள்ளனர். இதையடுத்து மதுபாபு அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

அதன் பிறகு ஒரே தவணையாக 30 லட்சம் ரூபாய் தருவதாக உறுதியளித்துள்ளனர். ஆனால் அறுவை சிகிச்சைக்கு பிறகு ரூ. 50,000 மட்டுமே கொடுத்துள்ளனர். இதுகுறித்து மதுபாபு கூறுகையில், எனக்கு கடன் இருப்பது அவர்களுக்கு தெரியும்.இதனால் தான் என்னை ஏமாற்றிவிட்டனர்.சிறுநீரகம் தேவைப்படும் ஒருவருக்கு உதவி செய்வதாக என்னை நம்ப வைத்து ரூ.30 லட்சம் தருவதாகவும் கூறினார்கள்.

இந்தப் பணம் எனது கடனை அடைப்பதற்கும், எனது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்த்தேன். இதை வைத்து குழந்தைகளை படிக்க வைக்க திட்டமிட்டிருந்தேன். இதனால் நான் அதற்கு சம்மதித்தேன். ஆனால், என்னை ஏமாற்றிவிட்டனர்,'' என, போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர்.விசாரணையில், உறவினர்கள் தான் கிட்னி தர முடியும் என்பதால், மதுபாபுவுக்கும், சிறுநீரகம் பெற்றவரின் குடும்பத்தினருக்கும், தொடர்பு ஏற்படுத்த, போலி ஆவணம் தயாரித்தது விசாரணையில் தெரியவந்தது

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web