அதிர்ச்சி வீடியோ... கைகளை இறுக்கமாக பிடித்தப்படி தந்தை - மகன் ரயில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை!

 
தண்டவாளம்
 


புதுடெல்லி, பயந்தர் ரயில் நிலையத்தின் அருகே  33 வயது மதிக்கதக்க வாலிபரும் அவரது தந்தையும் உள்ளூர் ரயில் முன் தண்டவாளத்தை கைகளை இறுக்க கோர்த்தப்படியே படுத்திருந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகி, காண்பவர்களின் கண்களைக் குளமாக்கி வருகிறது. 

சிசிடிவி வீடியோ காட்சியில், ரயில் நெருங்கி வருவதைப் பார்த்து இருவரும் கைகளை இறுக்கமாக பிடித்தப்படியே தண்டவாளத்தில் படுத்துள்ளனர். நேற்று ஜூலை 9ம் தேதி காலை 9:30 மணியளவில் பால்கர் மாவட்டத்தில் உள்ள பயந்தர் நிலையத்திலிருந்து உள்ளூர் ரயில் புறப்பட்ட பிறகு இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்ததாக அரசு ரயில்வே காவல்துறை (ஜிஆர்பி) அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இறந்தவர்கள் ஜெய் மேத்தா(35) மற்றும் அவரது தந்தை ஹரிஷ் மேத்தா 60 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் வசாய் பகுதியை சேர்ந்தவர்கள். போலீசார் இதனை விபத்து மரணம் என வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!